ஆர்கிட் வகை பூக்கள்
இல்லாத பொக்கேவே இல்லை எனலாம்.அத்தனை சிறப்பான இடம் அதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்குகாரணம் இல்லாமல் இருக்காது அல்லவா…ஆம். பல வகையில் கவர்ச்சியான வண்ணங்களுடன் பல வடிவங்களில்பளபளப்பாக பிளாஸ்டிக் பூக்களோ என்று எண்ணும் அளவிற்கு கொஞ்சம் கடினத்தன்மையோடு பலநாட்கள் சில
வகைகள் நான்கு ஐந்து மாதம் கூட வாடாமல் செடியில் இருக்கும் தன்மையுள்ளது .
அதனால்தான் அவைகள் பொக்கேயில்வைக்கப்படுகிறது. வரவேற்பறையில்எப்போதும் மலர்ந்திருக்கும் மலர்கள்மகிழ்ச்சியை பரப்புவதாகவே இருக்கும்அல்லவா. இந்தப் பூக்களை ரசித்த நான்
இந்தச் செடிகளைப்பற்றி அறிந்துக்கொள்வதில் அத்தனை ஈடுபாடு கொள்ளவில்லை.
ஒருமுறை சிங்கப்பூர் சென்றிருந்த போது முதன்முதலில் இந்தச் செடிகளைப்பார்க்கநேரிட்டது. சிங்கப்பூர் ஒரு அழகிய தேசம்.
அழகிய பரந்த சாலைகள் மிகவும் சுத்தமாகவும் சாலை ஓரங்களில் மரங்கள்மிக நேர்த்தியாக நடப்பட்டு வனம் போல
குளு குளு வென்று பசுமையாக கண்ணைக்கவரும் விதத்தில் இருக்கும்.
எனக்கு இயற்கையாகவே செடி கொடி மரம் பூக்கள் என்று தோட்டம் வளர்ப்பதில்ஆர்வம் உண்டு. காலை எழுந்ததும்தோட்டத்தில் சில நிமிடங்களை கழித்துவிட்டுத்தான் தினசரி வேலைகளை செய்யும் வழக்கம். அதனால் எங்கே சென்றாலும் புதுப் புது தாவரங்களை உற்று நோக்கும் பழக்கம் உண்டு. அவ்விதமே அங்கு இந்த ஆர்க்கிட் செடிகளை காண நேர்ந்தது. முதலில் அதுகொஞ்சம் குழப்பமாகவே தெரிந்தது. கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் சாலை ஓர மரங்களில் ஆங்காங்கே கொத்துக் கொத்தாய் பூக்கள்
பூத்திருப்பதை பார்பதற்கு மிகவும் ரம்மியமாகவே இருந்தது.
இதைப்பற்றி தெரிந்துக்கொள்ளும்
ஆவல் வந்தது.
ஆர்கிட் என்று சொல்லக்கூடிய கொய் மலர்கள் சாதாரணமாக மண்ணில் வளராது. இவற்றின் வளர்ப்பு முறையே வேறு. ஆகவே, மண் வைப்பதற்கு பதிலாக வேர்ப் பிடித்து வளர்வதற்கு செங்கல்லும் கரியும் கொண்ட கலவையை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் அதிக துளைகள் உள்ளதாக இருக்கவேண்டும் . தண்ணீர் வடிந்துவிட வேண்டும். தேங்கக்கூடாது செடியை வைத்தால் வேர்கள் அந்தக் கற்கள், கரித்துண்டுடன் பிடித்து நிற்கும். ஆனால், அதன் நுண்ணூட்டங்களை காற்றின் வழியே வரும் ஈரத்தன்மை மூலம்தான் கிரகித்துக் கொள்ளும்தேங்காய் நார்களுக்கு இடையே வைத்துஅதிக வெயில் படாத இடத்தில் மரங்களிலும் இணைத்து விடலாம். காற்றில் இருக்கும் ஈர பதத்தை எடுத்துக்கொண்டு செழிப்பாக வளரும்.
இது என் வீட்டு தோட்டத்தில் பூத்தஆரக்கிட் மலர்கள். இப்போதெல்லாம்
ரோஜாக்களை விட ஆர்கிட்ஸ் தான் அதிகம் வசீகரிக்கிறது.