
சிம்பொனி ஓசையின் சிணுங்கலில் சரியும் பின் அந்தி நேரம்… அறை முழுவதும் மெழுகுவத்தி ஒளியின் இசைந்த இசைக்கேற்ற ஜாஸ் நடனம்.. .ரோஜா சென்ட்டின் நறுமணம் கசிந்து கிறுக்கேற்றும் ரம்மியச் சூழலில்… என்னருகே நீ… ஆறடி உயரத்தில் இருபத்தி ஆறாண்டுகள் சேமித்து வைத்த அழகிய குறும்பாய்…திமிராய். .நளினமாய்…சிவந்த திராட்சை ரசத்தைக் கண்ணாடிக் கோப்பையில் நிரப்பி….எனக்களித்தே உன் கோப்பையை நிரப்புகிறாய்… நிரம்பி வழிந்த கோப்பைகள் மெல்ல உரசிக்கொள்ள…கண்களும் தான் அந்த நொடியில் பற்றிக்கொண்ட தீ ஒவ்வொரு மிடறிலும் வெம்மையாய் இறங்கி என் உயிரில் பரவி தகிக்க.. .நீயோ அந்தக் கதகதப்பில் குளிர்காய்கிறாய்! மனோஹரி |
best tamil kavithai viralkallii sikatha katrai nejamellam niraithani romance love fun kadhal kavithai pon mallai polluthu with glass of wine manohari kavithaikal