மிகவும் சுலபமான முறையில் மொறு மொறு
ரிப்பன்பக்கோடா செய்யும் முறை.
தீபாவளி நெருங்குகின்ற வேளையில்
என்ன காரம் இனிப்பு செய்வதென்று
யோசனையாகவே இருக்கும். மேலும்
வழக்கமாக வீட்டில் பலகாரம் செய்பவர்கள்
உண்டு. சிலர் வெளியில் ஆர்டர் கொடுப்பது
சிலர் கடையில் வாங்கிக் கொள்வதுண்டு.
இந்த முறை கொரோனா அச்சம் இருப்பதால்
வெளியில் வாங்க தயக்கம் இருக்கும்.
அதனால் எளிய முறையில் வீட்டிலேயே
சில பலகாரங்கள் செய்து கொள்ளலாம்.
மேலும் அது மகிழ்வையும் மனநிறைவையும்
தரும்.
இப்போது நாம் ரிப்பன் பக்கோடா செய்யும்
முறை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு
அரிசி மாவு
மிளகாய்த்தூள்
உப்பு
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
பொறிப்பதற்கு சமையல் எண்ணெய்
மாவு பிசைவதற்கு தண்ணீர்.
செய்முறை
அகலமான பேசின் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் 1 கப் கடலை மாவு 1 கப் அரிசி மாவு காரத்தின் தேவைக்கேற்ப மிளகாய் தூள்
உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும். பிறகு
சிறிது பெருங்காயத்தூள் கறிவேப்பிலை
சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
அல்லது நெய் சூடு செய்து மாவில் விட்டு
நீர் விட்டு பிசைய வேண்டும் இறுக்கமாக
அதிக நீர் விடக்கூடாது. அடுப்பில் எண்ணெய்
கடாய் வைத்து எண்ணை ஊற்றி சூடேறியதும் ரிப்பன் பக்கோடா அச்சில்
நிரப்பி எண்ணெயில் பிழிய வேண்டும்.நன்றக வெந்து பொறிந்த பின்
திருப்பி போட்டு எடுக்கலாம். அதிக சுவையுடன் மொறு மொறு ரிப்பன் பக்கோட ரெடி .சிறிதுநேரம்
ஆறவைத்து டின்னில் நிரப்பி முடி வைக்கலாம். தீரும் வரை மொறு மொறுப்பாய்
இருக்கும். ஆனால் வெகு சீக்கிரம் பறந்து விடும். நீங்களும் செய்து பார்த்து கருத்திடுங்கள்