Navarathri October 17/2020 நவராத்திரி அக்டோபர் 17 2020
நவராத்திரி அக்டோபர் 17 2020 இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்ற மூன்று இன்றியமையாத சக்தியை வழிப்படும் ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 17 ம்தேதி நவராத்திரி தொடங்குகிறது. பிரதமை தொடங்கி தசமி வரை ஒன்பது இரவுகள் அம்பிகையை அலங்கரித்து வணங்குவதன் மூலம் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். உலகத்தின் இயக்கத்திற்கு சக்திதான் ஆதாரம். சக்தியை வழிப்படுவது நவராத்திரி திருவிழா. ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. நிறைவான வாழ்க்கைக்கு கல்வி செல்வம் தைரியம் ஆகிய மூன்றும் தேவை. மூன்று சக்திகளையும் கலைமகள் அலைமகள் மலைமகளாக வழிப்படுகிறோம். முதல் மூன்று நாட்கள் வீரத்திற்கும் அடுத்த மூன்று நாட்கள் செல்வத்திற்கும் கடைசி மூன்று நாட்கள் கல்விக்குமாய் பிரித்து ஒன்பது நாட்கள் வணங்கப்படுகிறது. அந்தந்த நாட்களுக்குரிய வழிப்பாட்டுக்கானமலர்களும் நைவேத்தியமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் செய்ய வேண்டும் என்பதில்லை. கருணையே உருவான தாய் அவள் பக்தியாய் எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வாள். ஆனால் அதே நேரத்தில் கொஞ்சம் சிரமேற்கொண்டு அன்போடு தரும் காணிக்கையில் அவளை மகிழ்வித்தாதாய் எண்ணி நமது மனம் பரமானந்தத்தையும்ஆத்மார்த்தமான திருப்தியும் அடைந்து விடுகிறது அல்லவா… பிரதமை: முதல் மூன்று நாட்கள் துர்கா வழிபாடு.முதல் நாளில் அம்பிகையை மதுகைடபாரை அழித்த மகேஸ்வரியாக பாவித்து மல்லிகை வில்வம் இலைகளால் அலங்கரித்து.துர்கா அஷ்டோத்திரம் சொல்லி குங்குமத்தலோ மலர்களாலோஅர்ச்சனை செய்ய வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து வழிப்படலாம். துவிதியை: இரண்டாம் நாள் கௌமாரி தேவியாகராஜராஜேஸ்வரி யாக ஆராதிக்கப் படுகிறது.முல்லை துளசியால்அலங்காரம் செய்து துர்கா சப்த சுலோகி பாராயணம் செய்வது மிகச் சிறப்பு. புளியோதரை நிவேதனம் செய்து வழிப்படலாம். திரிதியை: மூன்றாம் நாளுக்குரியவளான அன்னையை செண்பகம்மற்றும் சம்பங்கிகள் கொண்டுஅலங்கரித்து மகிஷாசுரமர்த்தினி பாராயணம் செய்து வழிப்படுவது உத்தமம். சதுர்த்தி: நான்காம் நாளில் அம்பிகைமகாலட்சுமி தாயாரக அருள்பாலிக்கிறார். மல்லிகை செந்தாமரை மலர்களால் அலங்கரித்துலஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி பருப்புஅன்னம் நிவேதனம் செய்து வழிப்படலாம். பஞ்சமி: ஐந்தாம் நாள் அன்னையை வைஸ்ணவியாக வழிப்படவேண்டும் முல்லை பூ அலங்காரம் செய்து கனகதாரா ஸ்தோத்திரம் படித்து தயிர் சாதம் நைவேத்தியம் செய்துவழிப்படலாம். சஷ்டி: ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. ஜாதி மலர்களாலும் செந்தாமரை மலர்களாலும் அர்ச்சனை செய்து லஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்து தேங்காய் சாதம் படைத்து வணங்கலாம். சப்தமி: ஏழாம் நாளில் தேவி மகாசரஸ்வதியாக வணங்கப்படுகிறாள். அன்னைக்குதாழம்பூ சூட்டி தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். சரஸ்வதி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிப்படலாம். அஷ்டமி: எட்டாவது நாளில் தேவியானவள் நரசிம்மதருமி. சினம் தணிந்த கோலம்.இந்த நாளில் அன்பேஉருவாக அருள்பாலிக்திறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூட்டிசரஸ்வதி காயத்ரி உச்சரித்து அபிராமி அந்தாதி சொல்லி சக்கரைபொங்கல் நிவேதனம் செய்வது சிறப்பு. நவமி: ஒன்பதாம் நாளில் அம்பிகைசாமுண்டி மாதா. அம்பு அங்குசம் தரித்து லலிதா பரமேஸ்வரியாகஅருள்புரிகிறாள்.வெண்தாமரை மலர்களால் அலங்கரித்து லலிதாசகஸ்ரநாமம் பாரயணம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்துவழிப்படலாம். விஜயதசமி: பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றால் வெற்றி.தீயவை அழிந்து நன்மை பெருகும்.தொடங்கும் செயல்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்து வெல்லப் பனியாரம் சுண்டல் பொறி கடலைப் படைத்து பெண் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் பிரசாதம் கொடுக்கலாம். இந்த நாளில்பெண் பிள்ளைகளை போற்றி காத்து அவர்கள் அச்சமின்றி தங்கள் உரிமைகளுடன் அமைதியாய் உலகில் வாழ உறுதுணையாய் இருக்க உறுதி எடுப்போம். இந்த நவராத்திரி காலத்தில் இந்த மூன்று சக்திளையும் நம் இல்லத்தில் அழைத்து ஸ்தாபனம் செய்து சிரத்தையோடுவழிப்பட ஆயுசு ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும்.குழப்பம் நீங்கிமனத்தெளிவும் சாந்தியும் ஞானமும் பெருகும். இந்த மாபெரும் அன்னையின் சக்தி கொரோனா என்னும் தீயசக்தியை அழித்து நம்மை காத்தருள வேண்டும் என்று மொழி மதம் இனம் அரசியல் வேறுபாடுகளை நீக்கி இருகரம் கூப்பி பிரார்த்திப்போம். |







