கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்

(5 customer reviews)

400.00 199.00

Product is rated as #1 in category Tamil
Masterpiece10

கரையும் மணித்துளியில்
ஒளிரும் நொடிகள்

400.00 199.00

(-50%)
Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0

கரையும் மணித்துளியில்
ஒளிரும் நொடிகள்

மனோஹரி

karaiyum manithuil ollirum nodikal , by Manohari

Tamil book of poetry, original verses
*
விண்ணிலே பறக்கும் முன்
மண்ணிலே தடயங்களை
விட்டுச் செல்வோம்! – மனோஹரி

காதல் தேவதையின் இசைக் குறிப்புகள்
————————————————-
*
நிலவின் மெல்லொளி உருகிக் குழைந்து வழிகிற மொழிநடை – மிருதுவான கனவுகளுக்குள் கைபற்றி அழைத்துச் செல்லும் கற்பனைகளின் லாவகம் – நறுமணம் கசியும் முல்லை மொக்குகளால் இதயப் பரப்பைச் சில்லிப்பாய்த் தீண்டிக் கிறங்கவைக்கும் நுட்ப நேர்த்தி.
-இவையாவும் கைவரப் பெற்றவர் கவிதாயினி மனோஹரி. இவரது கவிதைகள் இலக்கிய தேசத்தின் மலர்வீதிகளில் அழகியல் அணிவகுப்பை நடத்தி இங்கே ஆச்சரியம் தருகின்றன. ஆன்மாவைத் தள்ளாட வைக்கும் கவிஞர் மனோஹரியின் ஷாம்பெய்ன் கவிதைகள், தமிழ்க் கவிதைகளின் சுவையை மேலும் மேலும் உயர்த்துகின்றன.
நூலில் உள்ள பெரும்பாலான கவிதைகள், காதலின் சன்னதியில் தியானிக்கின்றன. அவற்றின் பேரின்பப் பேரமைதி நம்மையும் நறுமணமாய்ச் சூழ்ந்துகொள்கின்றன.
கவிதாயினி மனோஹரி மூலம் நம் இலக்கிய உலகம், ஒரு வரகவியை வரமாகப் பெற்றிருக்கிறது.

ஆரூர் தமிழ்நாடன்
6.4.2020.
*
ஒளிரும் கணங்களில் சாசுவதித்திருக்கும் காதல்

வாழ்க்கையின் எதிர்பாராத தருணங்களில்
ஆங்காங்கே, அவ்வப்போது
நிகழும் பரவச நேசமிகு கணங்களை (அப்ஸல்யூட் மொமன்ட்ஸ்) அதன் சிலிர்ப்பை, எளிய நவீன கவிதைகளாய் ஆழ்மனதிலிருந்து அப்படியே நகலெடுத்துதொகுத்திருக்கிறார் கவிஞர் மனோஹரி தமிழின் அப்ரோடைட். தேவதைகளின் தேவதை.
காதலின் காதல்.
திரைப்பட இயக்குநர் குலசேகரன் தி
*

போதை ஊட்டும் கள்

கவிதைநிலவறைகளான மழலையைத்,தாய்மையை, அன்பை,நட்பைக் கூறவும் வேண்டுமோ!
பழைமைக்கும் பழைமையான காதல் வழக்கம் போல் கவிதைகளில் புதுமைக்கும் புதுமையாகிப் பழங் கள்ளாகிப்
போதை ஊட்டுகிறது! வயதைத் தாண்டிக் காதல் நாணத்தைக் கட்டவிழ்க்கின்றது! பெண் மொழி கேட்டு
மகிழ்கின்றது! பெண் நோக்குக் காதலாகின்றது!்
இந்தக் கவிதை .
—– முனைவர் பேராசிரியர் நா.நளினிதேவி

*

‘கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்” என்ற இந்த தலைப்பிலேயே அழகான ஒரு கவிதை எழுதிவிட்டார் என்று நான் உறுதியாகச் சொல்லுவேன். ஒவ்வொரு நிமிடமும் காலம் கரைந்து ஓடியபடியே இருக்கிறது. அதை யாரும் கையில் பிடித்து நிறுத்தி வைக்க முடியாது. ஆனால் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சில சம்பவங்கள் மட்டும் மனதில் நினைவுகளாகத் தங்கிவிடுகின்றன. அங்கே அவை ஒளி பொருந்திய காட்சிகளாக, நினைவுச் சிற்பங்களாக
நிலைத்து விடுகின்றன. அதைத்தான் இந்தத் தலைப்பு நமக்குச் சொல்லுகிறது.
இந்த உணர்வை அழகாக வெளிப்படுத்தும் ஒரு சிறிய கவிதை
“கடல் நீரில் கலந்திருக்கும் உப்பெனச்
சில நொடிகளும்
நம்முள் கலந்துவிடுகின்றன .”

—- திரைப்பட இயக்குநர் கவிஞர் பிருந்தா சாரதி

*
இருத்தலின் உறுத்தலே பறத்தல்” – மனோஹரி
என அறிவிக்கும் கவிஞர் மனோஹரி
காதல் கவிதைகளின் மூலம் பல பக்கங்களிலும் பறந்தாலும் மணற்கடிகையின் காலத்தை புரவியாக்கி அதன் கடிவாளத்தை தன் கையில் வைத்து இலக்கை அடைய முயல்கிறார். எளிய சிடுக்கற்ற இயல்பாய் உரையாடும் மொழியில் தன்னை இப்பிரதியில் ஒப்புக்கொடுக்கிறார் – நேர்மையாய். வேகவைத்தாலும் மசாலா கலந்தாலும் நிறமும் இனிப்பும் மாறாத பீட்ரூட் காய் போல நறுக்கென்று இருக்கிறது அசலான காதலைப் போல் இக்கவிதைகள்.
— கவிஞர் அமிர்தம் சூர்யா

தலைமை துணை ஆசிரியர் – கல்கி வார இதழ், சென்னை.
*

“விடியலுக்காய் / காத்திருக்கும் / பொழுதுகள்தான் / இரவின் / நீளத்தையும் / வண்ணத்தையும் / வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன” என்ற வரிகளை வாசிக்கும் பொழுது, நெஞ்சில் செதுக்கப்பட வேண்டிய கல்வெட்டு வார்த்தைகளாகவே இந்த கவிதை வரிகளை உணர்கிறேன்.
நம்பிக்கை விதைக்கும் கவிதைகள் மட்டுமல்ல. அழகியலாகவும், காதலாகவும் இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களில் மனோஹரியின் எழுத்துக்கள் மயக்கும் தமிழால் மயங்க வைக்கின்றன. சில இடங்களில் நம்மை நிமிர வைக்கின்றன.

நிமிர வைக்கும் கவிதைகள்
நிரம்ப இருப்பதே இந்தப் புத்தகத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன்.

— திரைப்பட பாடலாசிரியர்
கவிஞர் அருண்பாரதி

10Expert Score
கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்
Masterpiece
கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்
Masterpiece
10
PROS
  • Original Verses
  • Literary excellence
  • Tamil poetry

5 reviews for கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்

5.0 out of 5
5
0
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
  1. Arun

    சூப்பர்

    + PROS: சூப்பர்
    Helpful(1) Unhelpful(0)You have already voted this
  2. Prepamentor

    excellent work

    Helpful(1) Unhelpful(0)You have already voted this
  3. Bhavani

    Wonderful.Time spent in reading the book is an Investment which provides Happiness, Booster, Energy, Strength,Courage, Solace,Peace both mentally & physically. Kudos to Smt.Manohari,”Creator”.Live Long & Contribute / create more to WORLD /READERS. Thanks a lot for the Publication. So happy????????

    Helpful(1) Unhelpful(0)You have already voted this
  4. Manohari

    வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பில் மிளிரும் வானவில் கவிதைகள் அத்தனையும் அருமை. அனைவரும் படித்து இன்புறலாம்.????????????

    + PROS: Super
    Helpful(1) Unhelpful(0)You have already voted this
  5. prabhakaran

    Marvelous

    Helpful(1) Unhelpful(0)You have already voted this

    Add a review

    Your email address will not be published. Required fields are marked *

    கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்
    கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்

    400.00 199.00

    Manohari Madan
    Logo
    Reset Password