
மழையில் நனைந்திட அஞ்சிக் குடைவிரிக்கையில் பலத்த காற்று வீசிகுடையைப் பிடுங்கி எறிந்து முழுவதுமாய் நனைத்து விடும் ….
எதிர்பாராத ஒன்றைக் கைகளில் திணித்து விடும் காலம் அதை கொண்டாடும் நேரத்தில்அற்பமாய் பிடிங்கிக் கொண்டுகுரூரமாய் சிரிக்கும்….
சேற்றில் நெளியும் மண்புழு தன்உடல் சிதைந்தவுடன் மண்ணில் உரமாகி விடுவதில்லை அதி விரைவில் தன்னை மீட்டெடுத்துமீளுருவாக்கி கொள்ளும் ..
இதயம் நொறுங்கியதென்று நீ முடங்கி விடாதே வா… என்று மனம் கருத்துச் சொல்லித் தேற்றும்…
ஐந்தில் சிதைந்தது ஒன்று தானே… மீதி நான்கு இதயங்கள் துடிக்கிறதே அது மீண்டும் வாழ்ந்து விடுவதற்கு என்று அறிவு சதா சர்ச்சை செய்யும் …!!
Manohari
best tamil kavithai manohari poems manpullu life love uncertainty time fate regernation meeluruvakkam earthworm