
கற்பனைகளாளும் கனவுகளாளும்
மாயவுலகு படைக்கும் குப்லாகான் நீ…
உன் சாம்ராஜ்யத்தில் எதுவும்
சாத்தியமே…கலைஞன் நீ….
அன்பு…காதல்..வசியமே உன்
தோட்டத்து பூக்களாய் நறுமணம் பரப்ப..
தென்றல் மட்டுமே வீசும் உன்
மாளிகையில் காதல் ராகமே
இசைக்கும் கவிஞன் நீ….
நிலவும் சூரியனும் விண்மீன்களும்
ஒன்றாகவே வானவில்லில்
ஊஞ்சலாடச்செய்யும் மந்திரக்காரன் நீ…
மின்மினிகளின் வெளிச்சத்தால் உன்
இரவை நிரப்பும் வசியக்காரன் நீ ….
கிறங்கும் உன் விழிகள்…நீ பசித்தால்
புசிப்பது தாமரை ரோஜ இதழ்களே …
உன் கோப்பையில் திராட்சைரசமே
வழிந்தோடும் ரசனைக்காரன் நீ…
உன் கனவுதேசத்தில் என்றென்றும்
நான் உனக்கு தேவதை….
ஆராதனைகளும் அர்ச்சனைகளும் .
எனக்கும் பிடிப்பதால்… உன்னுடன்
இருந்துவிடுகிறேன் …உன்கனவில்…
அங்கே திராட்சை ரசங்கள்
புளித்துப்போவதில்லை….
அதனால் அன்பும் நேசமும் கூட
மாறாது இனித்தே இருக்கும்…
மனோஹரி